UNSEEN (UNDISPUTED) Facts-5 HOW PHIMOSIS (TIGHT FORESKIN) MAKES ERECTILE DYSFUNCTION AND SPOIL SEXUAL AND FAMILY LIFE......

A 38yrs old dark,height gentleman married was 20yrs old pale, attractive, average heighted girl 8yrs back. She's to his shoulder only. Both are not crossed secondary school. Both are rich enough for their need. It was an arranged marriage. They are from village and still lives in a village. After marriage they live a normal life for other's EYE. Years were gone. There is no child. Parent, relatives,friends and all started asking since long. His sister lives in a city. She often told him to go to the doctor. And compelled them too. He kept on refusing. Sometimes told her that he went. Yes he went to the Doctor thrice. First time when he went to they examined her and told everything is all right. Gave her some pills and come back for review. They went for few months and quit. Second time they went to another hospital. They examined her and told the same that everything is all right. And asked him to give the semen analysis. He gave. They told he has OLIGOASTHENOSPERMIA. And asked him to take some pill too and come back for review. He took medicine but didn't go for review and again they quit the treatment. Thired time they went to the hospital where there is a gynaecologist along with urologist.

Gynaecologist examined her and told her that everything is all right. Urologists examined him and found that he has PHIMOSIS (Tight foreskin). And oligoasthenospermia too. And gave him some pill to improve his seman parameters. He took the pill but again quit to go to review and stop the pill. Now he is 38 and she is 28. His sister got angry and scold them both .asked them to come to her. She took them both to the SEXOLOGIST. First examined him and found that he has CONGENITAL PHIMOSIS and from the investigation he caught that he has bilateral varicocele. Started him asking the questions for all questions his reply was he is all right. Doctor knew that he doesn't want to tell the truth asked him to sit outside with her sister and let his wife to come inside. Doctor started asking the questions to her about her marietal life , personal sexual life etc.... immediately TEARS ON HER EYES. Silence in the room like before the heavy rain. Doctor let her to breath a while. Gave the confidence that can share anything.

It will be helpful to treat both of them. She started slowly and sadly. Words fell like one box which is in top accidentally lack of support become the reasons for fall of all boxes. THERE WAS A NO SEX LIFE SINCE THE MARRIAGE HE HAS NO INTEREST IN SEX. HE HAS NO INTERNET IN. ROMANCE TOO. They both just LIVE the LIFE. He always watching the television till 11:00 pm- 12 mid night. This is his routine. Knowingly or unknowingly she adapted in routine life. But her mind wishes,dreams about SEX. The scenario is proven their issue. Doctor convinced her. And asked him to come in. And inform of her again asked everything. And let him to understand his problem and all they are behind him to come out from this. He too started recognise all. The problem was PHIMOSIS(TIGHT FORESKIN) when he get's Erection. The tight foreskin makes the pain and irritation. Immediately he LOOSE his Erection and all over. Doctor did the CIRCUMCISION to him. And give the treatment. New he recovered from the SEX ISSUES. She is very happy in her personal sexual life. Now they are in another step to get PREGNANT. DO YOU KNOW???...... HOW PHIMOSIS (TIGHT FORESKIN) Erectile Dysfunction and spoil sexual and family life..........

ஒரு 30வயதுடைய கருத்த,உயரமான ஆண். 28 வயதுடைய வெளிர் நிறமுடைய,கவர்ச்சியான,நடுத்தர உயரமுடைய பெண்ணை 8 வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். அப்பெண் அவருடைய தோள் உயரமே இருந்தார். இருவருமே உயர்நிலைக் கல்வி தாண்டவில்லை. இருவருமே அவர்களுக்குத் தேவையான அளவுக்கு செல்வமுடையவர்கக். பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் அதுவும் அவர்கள் இருவரும் கிராமத்தில் இருந்து வந்தவர்கள் மற்றும் இன்னும் கிராமத்தில் வசிக்கிறார்கள். திருமணத்திற்குப் பின் அவர்கள் மற்றவர் பார்வைக்கு சாதாரண வாழ்க்கை வாழ்கின்றனர். வருடங்கள் கடந்தன. அவர்களுக்குக் குழைந்தை இல்லை. பெற்றோர்,உறவினர்,உற்றார் அனைவரும் முன்னரே கேட்கத் தொடங்கி விட்டனர். அவருடைய சகோதரி நகரத்தில் வசிக்கிறார். அடிக்கடி அவரிடம் மருத்துவரிடம் செல்லுமாறு கூறிக் கொண்டே இருந்தார். சொல்வதோடு நில்லாமல் வற்புறுத்திக் கொண்டே இருந்தார். சகோதரரோ செவிமடுக்கவில்லை. சில நேரங்களில் சென்றதாகக் கூறிவிட்டார். ஆம்,அவர் மூன்று முறை மருத்துவரிடம் சென்றார். முதல் முறை கணவன் மனைவி இருவரும் மருத்துவரிடம் சென்றபோது அவர்கள் மனைவியை மட்டும் பரிசோதித்து விட்டு அனைத்தும் சரியாக இருப்பதாகக் கூறி விட்டனர். சில மாத்திரைகளை கொடுத்து பின்னர் வந்து காண்பிக்குமாறு கூறி விட்டனர். சில மாதங்கள் இவர்களும் சென்று விட்டு பின்னர் செல்வதை நிறுத்தி விட்டனர். இரண்டாவது முறை அவர்கள் வேறொரு மருத்துவமனைக்கு சென்றனர். அவர்கள் மனைவியை பரிசோதித்து விட்டு அதேபோல் அனைத்தும் சரியாக இருப்பதாகக் கூறி விட்டனர்,கணவரை விந்து பரிசோதனை செய்யப் பணித்தனர். அவரும் கொடுத்தார். அவர்கள் கணவனின் விந்தில் அணுக்கள் மிகக் குறைவாக இருப்பதாகக் கூறினர். அவருக்குச் சில மாத்திரைகளைப் பரிந்துரைத்து பின்னர் வருமாறு அறிவுறுத்தினர். கணவர் மாத்திரைகளை எடுத்துக் கொண்டார். பின்னர் ஆலோசனைக்கு செல்லவில்லை. மேலும் சிகிச்சை எடுப்பதையும் நிறுத்தி விட்டார். மூன்றாவது முறை அவர்கள் சென்றது மகப்பேறு மற்றும் சிறுநீரக சிறப்பு மருத்துவர் ஒருங்கே பெற்ற மருத்துவமனை.

மகப்பேறு மருத்துவர் மனைவியைப் பரிசோதித்து அனைத்தும் சரியாக இருப்பதாகக் கூறி விட்டார். சிறுநீரக சிறப்பு மருத்துவர் கணவரைப் பரிசோதித்து அவருக்கு PHIMOSIS(ஆண் உறுப்பின் முன்தோல் இறுக்கமாக) இருப்பதாகக் கூறினார் மற்றும் விந்தணு மிகவும் குறைவாக இருப்பதையும் (OLIGOASTHENOSPERMIA) எடுத்துரைத்தார். கணவர் மருந்துகளை குறிப்பிட்ட காலம் எடுத்துவிட்டு மறுபடியும் மருந்துகளையும்,ஆலோசனைக்கு செல்வதையும் எப்போதும் போல் நிறுத்தி விட்டார். இப்போது கணவருக்கு 38வயது. மனைவிக்கு 28வயது. கணவரின் சகோதரி கோபமடைந்து இருவரையும் திட்டினார். இருவரையும் அவளிடம் வருமாறு கூறினார். அவர்களிருவரையும் பாலியல் மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். பாலியல் மருத்துவர் முதலில் கணவரை பரிசோதித்து அவருக்கு CONGENITAL PHIMOSIS( குழந்தைப் பருவம் முதல் ஆண் உறுப்பின் முன்தோல் இறுகி) இருப்பதைக் கண்டறிந்தார். மேலும் பரிசோதனைகள் மூலம் அவருக்கு BILATRAL VARICOCELE (விந்துகுழாய் அடைப்பு இருபுறம்) இருப்பதையும் கண்டறிந்தார். அவரிடம் கேள்விகள் கேட்க ஆரம்பித்தார். அனைத்து கேள்விகளுக்கும் கணவரின் பதில் அனைத்தும் சரி. ஒரு பிரச்சனையும் இல்லை என்பதே. மருத்துவருக்கு தெரியும் கணவர் உண்மை சொல்ல தயாராக இல்லை என்று. கணவரை வெளியே அவரின் சகோதரியுடன் அமரவும்,மனைவியை உள்ளே அனுப்புமாறு மருத்துவர் கேட்டுக் கொண்டார். மருத்துவர் மனைவியிடம் கேள்விகளை ஆரம்பித்தார். அவர்கள் இல்லற வாழ்க்கை,தாம்பத்யம் மற்றும் பலவற்றை. உடனே அவள் கண்களில் கண்ணீர்த் துளிகள். கனமழைக்கு முன்னர் வானம் எப்படி அமைதியாய் இருக்குமோ அது போன்ற அமைதி அறையினுள். மருத்துவர் சில நிமிடங்கள் அப்பெண்ணை ஆசுவாசப்படுத்திக் கொள்ள செய்தார். எதுவாயினும் பேசலாம் என்ற நம்பிக்கையை அளித்தார்.

அது அவர்கள் இருவரையும் குணப்படுத்த உதவும் எனத் தெரிய வைத்தார். அவள் மெதுவாகவும் சோகமாகவும் பேச ஆரம்பித்தாள். வார்த்தைகள் மெதுவாக மேலே உள்ள பெட்டி ஈர்ப்பு விசை குறைபாட்டால் அனைத்து பெட்டிகளும் சரியக் காரணமாக இருப்பதுபோல் வெளியே வரத் துவங்கின. திருமணத்தில் இருந்தே இருவருக்கும் உடலுறவு என்பதே கிடையாது. கணவருக்கு உடலுறவில் நாட்டம் என்பதே கிடையாது. காதல் கிளர்ச்சியில் ஈர்ப்பு என்பதே இல்லை. இருவரும் வாழ்க்கை என்ற ஒன்றை வாழ்கின்றனர் அவ்வளவே. கணவர் எப்போதும் இரவு 11மணி வரை தொ(ல்)லை காட்சியில் மூழ்கி இருப்பார். பின்னர் அலைபேசியில் விளையாட ஆரம்பிப்பார். நள்ளிரவு 12 மணிக்கு மேல் தூங்க ஆரம்பிப்பார். இது அவருடைய நடைமுறை வாழ்க்கை. அறிந்தோ அறியாமலோ மனைவியும் இவ்வாழ்க்கைக்குப் பழகி விட்டாள். ஆனால் அவள் மனது உடலுறவுக்காக ஏங்குகிறது. உடலுறவுக்காக கனவு காண்கிறது. சூழ்நிலை அவர்களின் குறைகளைக் கூறிவிட்டது. மருத்துவர் அப்பெண்ணை சமாதானப்படுத்தினார். சாந்தப்படுத்தினார்,கணவரை உள்ளே வரப் பணித்தார். அப்பெண்ணின் முன்னே மறுபடியும் அனைத்தையும் கேள்விகளாக அடுக்கினார் அப்பெண்ணை நம்ப வைக்க கணவனுக்கு அவனுடைய குறைகளைப் புரிய வைத்தார். அனைவரும் அவன் பின்னே உதவுவதர்காகவே இருக்கிறார்கள் என உணர வைத்தார். கணவரும் அனைத்தும் புரிந்து கொள்ளத் தொடங்கினார். அவருடைய முதல் பிரச்சனை PHIMOSIS (இறுக்கமான நுனித்தோல்). அவருக்கு எப்போது விரைப்புத் தன்மை வருகிறதோ ஆணுறுப்பின் தோல் இறுக்கம் ஒரு வித வலியையும்,அசாதாரணமான உணர்வையும் ஏற்படுத்துகிறது. உடனே விரைப்புத்தன்மை குறைந்து செக்ஸ் உணர்ச்சிகள் உருத் தெரியாமல் தொலைந்து போகிறது. பாலியல் மருத்துவர் அவருக்கு CIRCUMCISION (நுனித்தோல் அகற்றல்) அறுவை சிகிச்சை செய்தார். அவருக்கு தாம்பத்யத்தில் ஈடுபாடு வர சிகிச்சை அளித்தார். இப்போது கணவர் செக்ஸ் குறைபாடுகளில் இருந்து குணமடைந்து விட்டார். மனைவி அவருடைய இல்லற,தாம்பத்ய வாழ்க்கையில் மிக மகிழ்வுடன் வாழ்கிறாள். இப்போது அவர்கள் கருத்தரித்தலுக்கான அடுத்த அடியை எடுத்து வைக்கின்றனர். உங்களுக்குத் தெரியுமா???....... PHIMOSIS (ஆண் உறுப்பின் நுனித்தோல் இறுக்கம்) எப்படி விரைப்புத் தன்மையை பாதித்து இல்லற மற்றும் திருமண வாழ்வை பாதிக்கிறது என்று. . . . .

wtsapp Icon